Thursday, November 5, 2009

நம்மால் முடியும்... ஆனால், ஏன் முடியவில்லை?




இன்று ஒரு வாசகர் கருத்து படித்தேன், அது எவ்வளவு உண்மை, படித்து பாருங்களேன்.
நம்மால் முடியும்... ஆனால், ஏன் முடியவில்லை? "உலகில் உள்ள மிகச்சிறந்த முக்கியப் பல்கலைக் கழகங்களில், "ஹார்வர்ட்' பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது; முதல் நூறு இடங்களுக்குள், இந்தியக் கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை' என, டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் சர்வே வெளியிட்டுள்ள செய்தி, கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கூடம் கூட, 30வது இடம் பெற்று பெருமை தேடிக் கொண்டுள்ளது. ஆனால், உலகின் மிகச்சிறந்த கல்வியாளர்களை, வல்லுனர்களைக் கொண்ட இந்தியா, பின்தங்கிப் போனது ஏன் என்பது, ஆராயப்பட வேண்டும். இன்று உலகக் கோடீஸ்வரர் பட்டியலில், முதல் நூறு இடங்களில், இந்தியர்கள் பலர், கணிசமான இடங்களைப் பெற்றுள்ளனர்; சந்தோஷமான விஷயம் தான். ஆனால், கல்வி நிறுவனங்கள் என்று வரும் போது, நூற்று க்குள் இடம் பெற முடியாமல் இருப்பது, மிகப்பெரிய கவலை அளிக்கக்கூடிய விஷயம்! "இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் வியத்தகு பாதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது' என்று பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால், இரண்டாவது முறை தொடர்ந்து பிரதமராகப் பதவி வகிக்கும் தன் காலத்தில், இந்தியக் கல்வி நிறுவனங்கள் கீழ்நோக்கிப் போய்க் கொண்டுள்ள நிலை கண்டு என்ன சொல்லப் போகிறார்? எல்லா இயற்கை வளங்களையும், மனித வளத்தையும் கொண்ட எழில்மிகு இந்தியாவில், கல்வி நிறுவனங்கள் இன்று கடைசிக்குத் தள்ளப்பட யார் காரணம்? உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களை உருவாக்கிக் காட்ட, எல்லா அம்சங்களும், சூழ்நிலைகளும் இருந்தும், பின்தங்கிப்போவது ஏன் என்று புரியவில்லையே? நம்மால் முடியும்! ஆனால், ஏன் முடியவில்லை என்பது தான் கவலைக்கிடமான கேள்வி.

-எம்.முகம்மது அனீஸ், பனைக்குளம்(நன்றி-தினமலர்)
>

2 comments:

தேவன் மாயம் said...

இந்தியக் கல்வி நிறுவனங்கள் இடம் பெறவில்லையே தவிர இந்தியர்கள் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் இடம் பெற்றிருப்பது சற்று ஆறுதல்!!!

மலரகம்(நாகங்குயில்) said...

என் பதிவிற்கு வருகை
புரிந்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்.
ஆமாம் சார்., சரியாகச்சொன்னிர்கள். இருந்தாலும் நமது நாட்டிலும் இனி வருங்காலத்திற்காகவாவது நல்ல உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள்
உருவாக அதிகமாக அரசும், தனியாரும் உழைக்க வேண்டும்.

Post a Comment