தமிழகம்
எத்தனையோ ஆட்சியை கண்டுவிட்டது, எத்தனையோ முதல்வர்களை பார்த்துவிட்டது., அனால் தமிழகத்திற்கென்று அன்றுதொட்டு இன்றுவரை
காவேரி பிரச்னை., இலங்கை பிரச்னை, மின்வெட்டு (தற்போது முல்லைப்பெரியாறு)
என்று சில பிரச்னைகள் , தீராத பிரச்சனைகளாகவே இருந்துவருகிறது.,
அரசியல் கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வரும் வரை 'நான் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்னையை தீர்த்து வைப்பேன், இலங்கைப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் ' என்றெல்லாம் சவால் விட்டு, ஆட்சியில் அமர்ந்தபின்னர் வாகாக மறேந்தே போய்விடுகின்றதை., நாமும் பார்த்துப்பார்த்து சலித்து விட்டோம் , அதன் தொடர்பில் இன்று தினமலரில் வந்த ஒரு வாசகரின் கடிதம் உங்கள் பார்வைக்கு.
------------------------------------------------------------------
யார் ஆண்டால் நமக்கு என்ன? கே.அருண்குமார், பல்லடத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்திற்கென்று சில பிரச்னைகள் இருக்கின்றன. அவை, யாராலும் தீர்க்க முடியாத பிரச்னைகளாக இருந்து வருகின்றன. முதலில், காவிரி பிரச்னை. "நடந்தாய் வாழி காவேரி, வான் பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி, பொய்யாதளிக் கும் பொன்னி' என்றெல் லாம் நாம் இலக்கியத்தில் படித்து மகிழ மட்டுமே முடியும். நம் அரசியல்வாதிகள், இடையில் ஆயிரக்கணக் கான லாரிகளில், காவிரி மணலைத் தோண்டி எடுத்து விற்று வருவதால், மணலுக்கு அடியில் உள்ள மண் தரை மேலே தெரிகிறது. அதில் செடி, கொடி, மரம் எல்லாம் முளைத்து, அது ஒரு ஆறு என்ற அடையாளமே காணாமல் போய் விட்டது. அடுத்து முல்லைப் பெரியாறு பிரச்னை. இதில், சுப்ரீம் கோர்ட் உத்தரவையே கூட, காலில் போட்டு மிதிக்கும் கேரள அரசு, அதைக் தட்டிக் கேட்கக் கூட துப்பில் லாத மத்திய, மாநில அரசுகள். இதையடுத்து, இலங்கைத் தமிழர் பிரச்னை. அங்கே என்ன நடக்கிறது என்பது, மக்களுக்கும் தெரியவில் லை; அரசுக்கும் தெரியவில்லை. அடிக்கடி மக்கள் செலவில், தூது போய் வந்து பாவ்லா காட்டுகின்றனர். மின்வெட்டு, இது ஒரு தீராத பிரச்னை. தீர்க்க முயல்கின்றனர்; ஆனால், தீர்ந்த பாடில்லை. இந்த நிலையில், தமிழகத்தை கருணாநிதி ஆண்டால் என்ன; ஜெயலலிதா ஆண்டால் என்ன? இதுவரை ஒரு கட்சி கோலோச்சி பெட்டிகளை நிரப்பியது. நாளைக்கு, பெட்டிகளை ஜெயலலிதா நிரப்பிக் கொள்ளட்டுமே! அந்தக் கட்சித் தொண்டர்களும், கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்துவிட்டுப் போகட்டுமே! இரண்டு இயலாதவர்களில், யார் ஆண்டால் என்ன?
---------------------------------------------------------------------
என் குறிப்பு:-
என்ன வலை நண்பர்களே?
அவர் உண்மையில் வெறுத்துப்போய் எழுதியிருந்தாலும், இவருக்கு அவர் தேவலை
என்று தான் மக்கள் வாக்களிக்கின்றனர்.,
தன்னலமில்லா மக்களுக்காக உண்மையிலேயே உழைத்த கர்மவீரர் காமராஜர் போன்ற நல்ல தலைவர்களும் நமது தமிழ்நாட்டில் தான் பிறந்தார், வாழ்ந்தார்
என்பதை நினைத்து பெருமை கொள்கிறோம்., இனி அப்படிப்பட்ட தலைவர்கள் நமக்கு கிடைப்பார்களா? காலம் தான் பதில் சொல்லும்.
மக்கள் பணி ஒன்றே நினைத்து உழைத்த கர்மவீரர் எங்கே?
கோடிகளில் புரளும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே?
எல்லாமே வியாபாரமாகவும், லாப நோக்கோடும் ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில்
அது அரசியலையும் விட்டுவைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
அனால் பாதிப்பு அடைவதேன்னவோ நாம் தான்.
>
Saturday, November 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அதானே...வீடு திறந்தே இருக்கிறது. சில நேரங்களில் நாமே திறந்துவிடுகிறோம். எவன் திருடினால் என்ன? இதில் எடுப்பவனின் புத்திசாலித்தனத்தை பொருத்து நம்முடைய இழப்புகளும் அமைகின்றன.
உங்களது சிந்தனை நன்றாயிருக்கிறது. காமராஜர் மீண்டும் பிறந்தால்..........
வருகைக்கும் ., பின்னூட்டத்திற்கும் நன்றி பாலாசி சார்..
Post a Comment