இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த 4-வது ஈழப்போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை அகதிகளாக முகாம்களுக்குள் சிங்கள அரசு அடைத்து வைத்துள்ளது.
விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்ட போதிலும் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் “ஈழம்” கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனி ஈழம் நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்நின்று நாடு கடந்த தமிழ் ஈழத்தின் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.
நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நடத்தி வரும் 59 தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால் ஈழத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகளும் மறுத்துவிட்டன
மாலை மலர் (20-10-2009) செய்தி
வரும் நாட்களில் அனைத்து நாடுகளும் ஆதரிக்கும் என்று எதிர்பார்ப்போமாக.
>
Tuesday, October 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. //
சாவுஙடா சின்கல வெரியர்கலா...
வருக ஊடகன் சார்
உங்கள் பின்னூட்டத்திலேயே தெரியுது உங்களின் உணர்வு..
நன்றி!
Post a Comment