Thursday, October 1, 2009

அது உண்மையில் கனாக்காலம் தான்







அதிகாலை நேரம்
ஒட்டு வீட்டு முற்றம்
வோரமாய் தூங்கும் என்னை
பள்ளி செல்ல எழுப்பும் அம்மா
கட்டி வெல்ல தேனிர்
சுடச்சுட பருகி
வேகமாய் ஓடுவேன்
அருகில் உள்ள குளக்கரைக்கு
ஆனந்த குளியல் போட...
பசங்களுடன் கும்மாள குளி(குதி)யல்
பெரியவர்களின் அதட்டலில்
கொஞ்சம் குறைத்துக்கொள்வோம்
கரணம் அடிப்பதை.
வீடு வந்து
தலைநிறைய எண்ணெய் தேய்த்து
அது வழிய வழிய வாரிவிடும் அம்மா
காலை உணவு ,
டிபன் பாக்ஸ், புத்தக பையுடன்
அம்மாவின் முத்தம் பெற்று
அடுத்தவீட்டு பையனுடன்
ஆற்றோரமாய் நடக்க
அரை மைல் தூரத்தில்
அடுத்த வூர் பள்ளிக்கூடம்.
ஒன்றுகூடி இறைவணக்கம்
பிரிந்து சென்று
வகுப்பறையில்
முன் பெஞ்சு பையனுடன்
எதாவது வம்பு
பிரம்புடன் வாத்தியார்
கல்வியோடு போதனைகள்
மாலையில் வீடு
தெரு பசங்கள் எல்லாம்சேர்ந்து
பம்பரம் விடுவோம் வெயில்நாளில்
பலிங்கி அடிப்போம் மழை நாளில்
பட்டம் விடுவோம் ஓய்வுநாளில்
கிட்டிப்பில் விளையாடாத நாளே இல்லை
தெரு தான் எங்கள் நண்பன்
ஒரே ஆரவார சத்தம்
ஓய்வதற்கு மாலை மணி எட்டு ஆகும்.
ஆறு வற்றும் நாட்களிலோ
காலில் மணல் பதிய பதிய
கபடி விளையாட்டு
வேர்வை கொட்டி வீடு திரும்ப
இருட்டிவிடும் -பாட்டு விழும் அம்மாவிடம்.
பரீட்சை நேரம் -படிப்பதுண்டு
மீண்டும் மறுநாள்...
அதே
குளத்திலே குளி(குதி)யல்...
அப்பப்பா !
எண்ணிப்பார்க்கையில்
களைப்பில்லா ,கவலையில்லா நேரம் அது
அகவை நாற்பதில் அசைபோட
அது ஒரு கனாக் காலம் தான்.

இன்றோ
அதே மாலை வேலை
விளையாடும் பசங்களை காணோம்
வெறிச்சோடி கிடக்கிறது தெரு
டிவி சத்தம் தான் வீடுகள்தோறும்
வீட்டோடு முடங்கிப்போய்
இளந்தளிர்கள்.

ஆனாலும்...
சாதனைகளுக்கும் குறைவில்லை
சிகரம் தொட தயங்குவதில்லை
சச்சின்
A.R. ரஹ்மான்
டோனி
சனியா மிர்சா
விசுவநாதன் ஆனந்த்
எல்லோரும்
இளையர்கள்.
இன்னும் வருவார்கள்...
இன்றைய இளையர்கள் வழியும் தனி வழி தான்

>

0 comments:

Post a Comment