Saturday, October 24, 2009

நடிகவேள் எம் ஆர் ராதா மறைந்த அன்று.


-எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்னா… கட்டை, கம்பு, கத்தி கிடைக்கலை. துப்பாக்கிதான் கிடைச்சது… அதான் சுட்டேன்!

-சிவாஜியா, அவனா… என் நாடகக் குழுவில்தான் இருந்தான்.
-கலைஞர்ன்னு பட்டம் வாங்கிக்கறான்…அவனவன் காசு கொடுத்து.
-நடிகர்கள் கடவுள் மாதிரி… ரசிகர்கள் கருவறைக்கு முன்னாடியே நின்னுடனும்.
-ஏண்டா, நடிகனைப் போய் தலைவாங்கிறே. உன் காசுலதானே அவனே பெரியாள் ஆயிருக்கான்.
- இந்த பேச்சுக்கு சொந்தக்காரர் 'நடிகவேள்' திரு எம் ஆர் ராதா அவர்கள் தான் மலேசிய நாட்டுக்கு சென்றிந்தபோது அவர் ஆற்றிய அந்த கேசட் அனேகமாக எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.
இப்படி சரளமாக, உறுதியாக, பயப்படாமல் மனதில் உள்ளதை அப்படியே பேசுபவர் , நடிப்பில் இவருக்கென்று தனி பாணி,  இவர் சினிமாவில் பேசும் வசனங்கள் மிரட்டும் தொணியிலும், சமயத்தில் நக்கலும் கேலியும் கலந்து பேசுவது  பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்.

அந்தக்காலத்திலேயே வெளிநாட்டு சொகுசு கார் வாங்கி அதன் பின்னால் வைக்கோல் ஏற்றி சென்று சக நடிகர்களிடம் கடுப்பை உண்டாக்கியவர். 
இவர் அடிக்கடி சொல்லும்  'அடப்பாவிங்கடா' என்ற வசனம் இப்போதும் நடிகர் 'விவேக்' அடிக்கடி திரு எம் ஆர் ராதா  பாணியிலேயே சொல்லி சிரிப்பை வரவழைக்கிறார். 

நாள் 17-september-1979. இடம் திருச்சி
அன்று வழக்கம் போல காலையில் கல்லூரி  சென்ற எனக்கு அதிர்ச்சி., நடிகவேள் அவர்கள் அன்று காலையில் இறந்த செய்தி தான் காரணம். எனக்கு பிடித்த அந்தக்கால நடிகர், பேச்சாளர், பெரியார் தொண்டர் அவர் என்பதால் இயற்கையாகவே மிகவும் வருத்தமானேன். நானும் எனது நண்பர்களும் அருகிலுள்ள சங்கிளியாண்டவர்புரம் அவரது வீட்டுக்கு
சென்று இறுதி அஞ்சலி செலுத்த சென்றோம். கட்டுக்கிடங்கா கூட்டம். எல்லோரும் வருசை பிடித்து நின்று ஒவ்வொருவராக சென்று மரியாதை செய்து  வந்தோம்
அங்கே, திரு எம் ஆர் ஆர் வாசு , மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நின்றிந்தனர்.
வெளியே வரும் பொது, திரு ராதிகா அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த உள்ளே சென்றார்(குறிப்பு: அப்போது தான் அவர் நடித்த முதல் படமான 'கிழக்கே போகும் ரயில்' வெளியாகி ஓடிக்கொண்டு  இருக்கிறது, அவர் அவ்வளவாக பாபுலராகாத நேரம் அது) அனால் அவரை இறுதி அஞ்சலி செலுத்த விடாமல் அங்கிருந்த திரு எம்  ஆர் ராதா அவர்களின்
குடும்ப உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி
தள்ளுமுள்ளு, வாக்குவாதம் நடந்துகொண்டு இருந்தது.
அப்புறம் நாங்களும் கல்லுரிக்கு திரும்பிவிட்டோம். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
(இன்று திரு ராதிகா அவர்களும் அந்த கலைக்குடும்பத்தின் வாரிசாக திரைப்படத்திலும் சின்னத்திரையிலும் சாதனை செய்துகொண்டு இருக்கிறார் என்பது வேறு விஷயம்).
பின்னர் மாலையில் அவரின் இறுதி ஊர்வலத்தில் , தென்னிந்திய திரைப்பட சங்கத்தினர்கள், பொதுமக்கள் என்று ஆயிரக்கணக்கானோர்  கலந்துகொண்டனர்.

நடிகவேளின் மறைவு - திரையுலகத்துக்கு , ஏன் பொதுவாகவே தமிழ் பேசும் நல்லுலகுக்கு  ஒரு பேரிழப்பு என்றாலும் மிகையில்லை.
>

5 comments:

Raja said...

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, நான் அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் (செல்லமணியம்மாள் தொடக்கப்பள்ளி, தெப்பக்குளம் அருகில்), பள்ளி அருகில் உள்ள கட்டிடத்தின் கம்பிகளின் மீது ஏறி அந்த இறுதி ஊர்வலத்தைப் பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது.

ravi said...

super

azeem basha said...

me also but i watched from first floor of of chella store, hope that i was studying 5th standard in nangavaram school back side saradas.

வெண்ணிற இரவுகள்....! said...

-எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்னா… கட்டை, கம்பு, கத்தி கிடைக்கலை. துப்பாக்கிதான் கிடைச்சது… அதான் சுட்டேன்!-சிவாஜியா, அவனா… என் நாடகக் குழுவில்தான் இருந்தான்.-கலைஞர்ன்னு பட்டம் வாங்கிக்கறான்…அவனவன் காசு கொடுத்து.-நடிகர்கள் கடவுள் மாதிரி… ரசிகர்கள் கருவறைக்கு முன்னாடியே நின்னுடனும்.-ஏண்டா, நடிகனைப் போய் தலைவாங்கிறே. உன் காசுலதானே அவனே பெரியாள் ஆயிருக்கான்.///
இப்படி பேசுவதற்கு யாருக்கு தைரியம் வரும்

மலரகம்(நாகங்குயில்) said...

திரு ராஜா ... நன்றி
திரு ரவி .. நன்றி
ஜனாப் அஜிம் பாட்சா.. நன்றி
திரு ஊடகன் சார் நன்றி
உங்களின் பின்னோட்டத்துக்கு

Post a Comment