Saturday, October 3, 2009

கவியரசு கண்ணதாசன்
















என் நினைவுகளில்

கவியரசு கண்ணதாசன்

திருச்சி - 1980

(மாதம் நினைவிலில்லை)
எங்கள் கல்லூரி விடுதி ஆண்டுவிழாவிற்கு வருகை புரிந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று எங்கள் எல்லோரையும் அவரது பேச்சு அசையவிடாமல் ரசிக்கவைத்தது. மாலை சுமார் எட்டு மணி அளவில் பேசத்தொடங்கினார் 2 மணி நேரம் போனதே தெரியவில்லை , நகைச்சுவை கலந்து அனைவரயும் கலகலப்பாக்கி பேசினார்., அப்போது தான் எனக்கு தெரிந்தது அவர் நல்ல கவி மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் கூட என்று.
அவர் பேச்சில்,
திருச்சியில் தான் அவருக்கு கவியரசு பட்டம் கொடுத்தார்களாம் அதை
குறிப்பிட்டு ,எனக்கு 'கவியரசு' பட்டம் கொடுத்தது இங்கே தான் ., அதை தான் இன்று மாற்றி 'அரசுகவி' ஆக்கி இருக்கின்றார்கள் (எம் ஜி ஆர் ஆட்சியில் கண்ணதாசனுக்கு அரசுகவி என்ற மரியாதை செய்திருந்தார்கள்). என்று கூறினார்.

சில வாக்கியங்களை சுத்த தமிழில்
எழுதும் பொது அர்த்தம் மாறி விடும் என்று சில வார்த்தைகளையும் குறிப்பிட்டார்
கவர்னர் ஷா வே வருக - ஆளுநர் சா வே வருக (அப்போதைய தமிழக கவர்னர் திரு கே கே ஷா)
ரப்பர் தொழிர்ச்சாலை-இரப்பர் தொழிற்ச்சாலை யாகவும்
மற்றும் குஸ் வந்த சிங் என்ற பெயர்.

அது போலவே நம் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலேயர்கள் பேசும் பொது மாறி ஒலிப்பதையும் குறிப்பிட்டு பேசினார் , நேசமணிபொன்னையா
என்ற பெயரை நாசமா நி போனியா என்றெல்லாம் மாறி அழைப்பதை சொன்னார்.

பின்னர் அவர் எழுதிய பாடல்கள் பலவற்றை குறிப்பிட்டு பேசினார் அவர் பலே பாண்டியா படத்தில் எழுதிய , 'அத்திக்காய் காய் காய்' என்ற பாடலில் காய்கறிகள் பெயர்கள் வரும் வரிசையாக ., கஷ்டப்பட்டு எழுதிய அந்தப்பாடலை 'கொத்தவால் சாவடி பாட்டு' என்று விமர்சனம் செய்ததை குறிப்பிட்டார்., 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலின் கடைசிவரி யான 'அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை ., என்று தான் கவிதை எழுதவும் பெண் தான் காரணம் என்று மறைமுகமாக குறிப்பிட்டார்.

சில பாடல்களை அவரே அழகாக பாடியே காட்டினார்.
அன்று அவரது பேச்சில் இலக்கியம்., கவிதை ., சினிமா , என்று பல விஷயங்கள்
கலந்து இருந்தது.
அதற்கு அடுத்த வருடம் 1981இல் மறைந்தார். அவரின் இழப்பு
தமிழ்த்தாய்க்கு பெரிய இழப்பு என்றால் அது மிகையில்லை.

இரத்தத்திலகம் படத்தில் அவரே நடித்து பாடிய பாடலில்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை , எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்ற வரிகள் முன்பே யோசித்து எழுதிய வரிகள் போலவே எனக்கு தோன்றுகிறது.

இன்றும் அவரின் அனைத்து பாடல்களுமே சாமான்யனும் புரிந்துகொள்ளும் அர்த்தங்களுடன் ., தமிழ் பேசும் நல்லுலகமெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது .
>

3 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

//"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை , எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்ற வரிகள் முன்பே யோசித்து எழுதிய வரிகள் போலவே எனக்கு தோன்றுகிறது.//
நீங்கள் சொன்னது மிக மிக சரி

மலரகம்(நாகங்குயில்) said...

உங்கள் பின்னோட்டத்துக்கு நன்றி நண்பரே
வாழ்த்துக்கள்

ஊடகன் said...

//இன்றும் அவரின் அனைத்து பாடல்களுமே சாமான்யனும் புரிந்துகொள்ளும் அர்த்தங்களுடன் ., தமிழ் பேசும் நல்லுலகமெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது . //

உண்மை தான்..........

Post a Comment