Saturday, October 17, 2009

தமிழகத்தின் "ஹீரோ" ஆகிறார் பிரபாகரன்


தமிழகத்தின் 'ஹீரோ' ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?
-தினமலர் செய்தி (18-10-2009)


புலிகள் தலைவர் பிரபாகரனை தங்கள் ஹீரோ வாக பாவிக்கும் மனநிலை பலரிடத்தில் பரவி வருவது தமிழகத்தின் ஆரோக்க்யதுக்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறப்புக்கு பின் இலங்கையில் தமிழன் கனவு தகர்ந்துபோனது. அவர் இருந்தவரை இலங்கை தமிழர்களின் ஒட்டுமொத்த குரலுக்கு எதிரொலியாக இருந்து செயல்பட்டதால் அவருக்கு அங்குள்ள தமிழ்ர்களின் மனதில் தனி இடமுண்டு.

தமிழர்களுக்கு வாழ்க்கையை செலவு செய்ததால் உலக தமிழர்களிடத்திலும்
பிரபாகரனுக்கு என்று ஒரு அந்தஸ்து இருந்து கொண்டு தான் வருகிறது. தமிழகத்தில் இருந்த பல்வேறு கெடுபிடிகளால் அவரது பெயரை உச்சரிப்பது
கூட ரகசியமாகவே இருந்தது.

அவரது இறப்புக்குப்பின் பிரபாகரன் ஆதரவு கரம் வெளிப்படையாகவே முளைக்க துவங்கி உள்ளன. நடிகர்கள், தெய்வங்கள், அரசியல் தலைவர்கள் படங்கள் போல கையில் பச்சை குத்திக்கொள்வது, சட்டையில் லோகோ அச்சடிதுக்கொள்வது, வாகனங்களில் ஸ்டிக்கர் ஓட்டுவது என பிரபாகரன் மோகம் அதிகமாகிவிட்டது "சீசன்' போல அல்லாமல் ரியல் ஹீரோ ஆக மாறி வரும் பற்றுப்படலம் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்துமோ என உளவுப்பிரிவினருக்கே தற்ப்போது உதறல் ஏற்ப்பட துவங்கி உள்ளது.

பிரபாகரன் உயிரோடு இருந்தவரை அவருக்கு இந்த அளவிற்கு கரிசனம் காட்டப்பட்டதா? என்பது கூட சந்தேகமே. தமிழருக்காக அன்பு மனைவி,
மகன், மகளை இழந்து இறுதியில் தன்னையே பலி கொடுத்த அவரது தியாகம்
தமிழக மக்களிடையே அவருக்கு "ஹீரோ" அந்தஸ்தை பெற்று தந்துள்ளது. என்றாலும் இதன் பின் விளைவு எப்படி இருக்குமோ? என்ற கோணத்தில் ஆட்சியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளது என்பது மட்டும் உண்மை.

( தினமலர் செய்தி -18 - 10 - 2009)

இவ்வளவு எழுதிவிட்டு எதனால் கலக்கம் அடைகிறார்கள் என்று குறிப்பிடவில்லை. தமிழ் உணர்வு இயற்கையாகவே தமிழரிடத்தில் இருக்கும் வரை , இந்த வெளிப்பாடு எப்போதும் இருக்கும்


>

9 comments:

Anonymous said...

ஆமாம் சார்
அவங்க அவங்களுக்கு பிடிச்சிருக்கு , போட்டோ , ஸ்டிக்கர் , வைச்சுக்க்றாங்க .,
இதில்லென்ன கலக்கம் ஏற்படப்போகிறது.

ரோஸ்விக் said...

உண்மைதான். பிரபாகரன் தலைவனாக ஏற்றுக்கொள்ளப் பட்டுக்கொண்டு வருகிறார். ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறது நம் தமிழ் இனம். வெற்றி நிச்சயம்! வாழ்த்துக்கள்.

http://thisaikaati.blogspot.com

மலரகம்(நாகங்குயில்) said...

முதல் தடவை என் வலைப்பக்கம் வந்தமைக்கும், தங்கள்
பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே

Guna said...

we should be proud about our national leader..yes..yes..prabha is our only one tamil leader..

saba said...

yes true leader forever he is father of tamil nation.
sabastin francus
chennai

சாந்தி நேசக்கரம் said...

ரோஸ்விக் said...

உண்மைதான். பிரபாகரன் தலைவனாக ஏற்றுக்கொள்ளப் பட்டுக்கொண்டு வருகிறார். ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறது நம் தமிழ் இனம். வெற்றி நிச்சயம்! வாழ்த்துக்கள்.

*************************

பார்ப்போமே பொறுத்திருந்து ஒற்றுமையா அல்லது வியாபாரமா என்ற. நக்கீரன் தொடங்கிய வியாபாரம் இப்போ வடிவங்கள் மாறியிருப்பதைத் தான் எல்லா வெளிப்பாடுகளும் புரிவிக்கின்றன.

சாந்தி

மலரகம்(நாகங்குயில்) said...

welcome Mr.guna
Thankyou for your comment., Yes he is our real hero

மலரகம்(நாகங்குயில்) said...

Welcome mr Sabastin Francus
he is true leader which you commented., yes.

மலரகம்(நாகங்குயில்) said...

முல்லை மண்
வணக்கம்., நன்றி உங்களின் பின்னூட்டத்திற்கு.
பொறுத்திருந்து பார்ப்போம்.,
காலம் நிச்சயமாய் பதில் கூறும்

Post a Comment